Friday, 12 July 2013

ஆழ்வார்ப்பேட்டை ருசி

ஆழ்வார்ப் பேட்டை சாலை என்று உள்ளார்ந்த சாலை ஒன்று தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியிலிருந்து Bharatidasan Salai to ஆழ்வார்ப்பேட்டை போகும் பாதைக்கு குறுக்கே உள்ள Thiruvalluvar road புகுந்தால் வரும். அங்கு ஒரு மெஸ்ஸில் கூட்டம் அலைமோதுவதைப் பார்த்து இரண்டு மூன்று நாட்களுக்கு அங்கு போனேன். சாப்பிடத்தான்.
காலையில் இட்லி பூப்போல இரண்டு வகை சட்னி சாம்பாருடன் சூப்பரா இருந்தது. மெதுவடையும் அட்டகாசமான சுவை. பூரி அதிகமாக ஈர்க்கவில்லை ஆனால் பொங்கலும் கிச்சடியும் பரபரப்பாக விற்பனையானது. வயிறார சாப்பிட்டு 30 ரூபாய் கூட பில் வரவில்லை.

இதே கடையில் மதியம் வந்தால் ஒன்றரை மணிக்கே சாப்பாடு எல்லாம் காலி.  வெறும் புளிசாதம் இருந்தது. அரை புளி சாதம் பத்து ரூபாய் அதுவே திருப்தியா இருந்து சில பழங்களுடன் உணவை முடித்துக் கொண்டேன்.
மறுநாளும் ஒருமணிக்கே போய் விட்டேன். சாம்பார்சாதம் உருளைப் பொறியல் ஊறுகாய், எலுமிச்ச சாதம், கீரை சாதம், பிரிஞ்சி சாதம், புளிசாதம், தயிர் சாதம் என ஒவ்வொரு வகை சாதமும் சூப்பர்தான். தினமும் ஒன்றிரண்டு சாப்பிட்டு பார்த்துவிட்டேன். தாராளமாக போய் சாப்பிடுங்க . 50 ரூபாய்க்கு மேல் பில் வரவே வராது.
கடை பெயர்  KITCHAS   ALWARPET ROAD 

No comments:

Post a Comment