Tuesday 26 June 2012

திண்டுக்கல் தலப்பாக்கட்டு

கடந்த 2 வாரங்களாக ருசியாக சாப்பிடவில்லை. பணமில்லை என்பதால் மட்டுமல்ல. மனசும் சரியில்லை. நண்பர் ராமமூர்த்தி திடீரென போன் பண்ணி வாங்க மீன் சாப்பிடலாம் என்றார். பாரிமுனையில் காத்திருந்த அவரை சந்தித்த போது எங்கே போய் மீன் சாப்பிடுவது என்று புரியவில்லை. சரி என எண்ணத்தை மாற்றி, பிரியாணி சாப்பிடலாம் என்று முடிவு செய்தோம். அருகில் இருந்த தலப்பாக்கட்டு பிரியாணி ஹோட்டலுக்குள் நுழைந்தோம். எங்களுடன் மற்றொரு நண்பரும சேர்ந்துக் கொண்டார். சிறிய தாமதத்திற்குப் பிறகு எனக்குப் பிடித்த பிரியாணி கிடைத்தது. வழக்கமாக பிரியாணி வாங்கும்போது பெரிதாக இரண்டு கறித்துண்டுகளுடன் தக்காளி சாதம் மாதிரி ஏதோ ஒன்று கிடைக்கும். ஆனால் இங்கேயோ கறித்துண்டுகள் சிறியதாக நறுக்கப்பட்டு, பக்குவமாக வேக வைக்கப்பட்டிருந்தது. பாசுமதி அரிசியில் மிளகு கலந்து இருந்தது காரமாகவும் ருசியாகவும் இருந்தது. ராமமூர்த்தி கறியே இல்லையே என குமுறினார். எனக்கு நிறைய இருப்பதாகப் பட்டது. சர்வர் உடனடியாக ஒரு கிண்ணத்தில் பத்து பதினைந்து கறித்துண்டுகளை மடடும் கொண்டு வந்தார். அவர் அத்தனையும் சாப்பிட்டுவிட்டார். கூட அற்புதமான குருமாவும் தயிர் பச்சடியும் இருந்ததால் திருப்தியாக இருந்தது. பொதுவாக அசைவ உணவுகளைக் குறைத்துக் கொண்டே வந்தாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்கள்தான் மீண்டும் மீண்டும் ஆசையைத் தூண்டுகின்றன. எல்லாம் சரிதான் பில்தான் அநியாயம். 3 பேருக்கு கிட்டதட்ட 500 ரூபாய் ஆகி விட்டது. பில்லுக்குப் பணம் தந்த ராமமூர்த்தியை பாராட்டுவதா திட்டுவதா என்றே தெரியவில்லை

No comments:

Post a Comment