Sunday 25 January 2015

மயிலாப்பூர் ஜன்னல் கடை

மயிலாப்பூர் கபாலீசுவர் கோவில் செருப்பு வைக்கும் பகுதியை ஒட்டி சுவரோரம் நடந்து சென்றா்ல் ஒரு சிறிய ஜன்னல் திறந்திருக்கும் அங்கு காலையில் டிபன் சாப்பிட பெரும் கூட்டமே திரண்டிருக்கும். இட்லி, வடை, பொங்கல், கி்ச்சடி, பூரி என 9,30 மணிக்குள் எல்லாமே காலியாகி விடும். சற்று குதர்க்கமாக பேசும் கடை உரிமையாளரை சகித்துக் கொண்டு அங்கு பலரும் சா்ப்பிட வருவது ருசிக்காகத்தான். இருவகையான கார சட்னிகள், பிராமண சமையல் ருசியுடன் உள்ள சாம்பார் , பூரிக்கு தரும் மசாலாவிலும் சுவை என இ்க்கடை ஏதோ ஒரு உயிர்ப்புடன் இயங்குகிறது. விலை மலிவு அல்ல என்றாலும் ஓட்டல்களை விடக்குறைவுதான். சரியாக கழுவாத தட்டுகள், கை கழுவும் நீரே குடிநீர் போன்ற குறைகளை பெரிதுபடுத்தாவிட்டால் போய் ஒருமுறை சாப்பிட்டு பார்க்கலாம்.

No comments:

Post a Comment